காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு மேஜிக்கல் திரைப்படம் என சிம்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்

சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த மாதிரி தான் நடிகர் சிம்புவிற்கு பல படங்கள் இருந்தாலும் குறிப்பாக சொல்லும் படி விண்ணைத்தாண்டி வருவாயா மிகப் பெரிய ஹிட் கொடுத்தது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் ஹிட் அடித்து ஒரு பக்கம் இருந்தாலும் கூட மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டும் ஆயிரம் நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி தமிழ் சினிமாவிலே ஒரு பெரிய சாதனையையும் படைத்தது.வருடங்கள் கழித்தும் இந்த திரைப்படம் இப்போது வெளியானால் கூட காதல் ஜோடிகள் ஜோடியாக சென்று படத்தைக் கண்டு மகிழும் அளவிற்கு ஒரு தரமான படத்தை இயக்குனர் கௌதம் மேனன் கொடுத்து இருக்கிறார்.
அதற்கு உதாரணம் தான் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட போதும் மக்கள் கொடுத்த வரவேற்பு. அந்த வரவேற்பை வைத்தே காலத்தால் அழிக்க முடியாத ஒரு காதல் படமாக தமிழ் சினிமாவில் இந்த படம் எப்போது இருக்கும் என தெரிகிறது. இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகள் மற்றும் பாடல்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் வெளியிட்டு நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
இந்த சூழலில், படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் நெகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு சிம்பு பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு இப்போதும் மக்கள் கொடுத்து வரும் ஆதரவை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் ரிலீஸானபோதே சூப்பர் ஹிட் கொடுத்தீர்கள். மீண்டும் ரீலீஸானபோதும் 1000 நாட்களைக் கடந்து படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒரு மேஜிக்கல் படம். உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனவும் கூறியுள்ளார்.
#15yearsofVTV 🤍💙 pic.twitter.com/ElyfgVNtfm
— Silambarasan TR (@SilambarasanTR_) February 26, 2025
மேலும், இதற்கிடையில், ‘விண்ணை தாண்டி வருவாயா 2’ பற்றிய செய்திகளும் அடிக்கடி இணையத்தில் பரவி வருகிறது. இது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.