விஷால் இயக்குனராக அறிமுகமாகும் துப்பறிவாளன் -2 படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளதாம்.
மிஷ்கின் இயக்கத்தில் 2017இல் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் துப்பறிவாளன். இதில் படத்தின் கதையும், அதனை சொல்லிய திரை மொழியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக காட்சியமைப்புகள் இருந்தன. அந்த வரவேற்பை கண்டு அப்படத்தின் 2ஆம் பாகம் தயாராக இருந்தது.
கொரானாவுக்கு முன்னர் துப்பறிவாளன்-2ஆம் பாகம் அறிவிக்கப்பட்டது. அப்போது அறிவிக்கப்பட்டபோது மிஷ்கின் தான் இயக்குனர். விஷால் தயாரிப்பாளராக இருந்தார். அதன் பின்னர், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.
அதன் பின்னர் விஷாலே இந்த படத்தின் இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் இப்பட வேலைகள் நடைபெறாமலே இருந்தது. அதனால், படம் டிராப் என கூறப்பட்டது.
ஆனால், அதனை பொய்யாக்கும் விதமாக தற்போது புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஆரம்பிக்க உள்ளதாம். இப்பட ஷூட்டிங் ஜனவரியில் தொடங்கி, கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விரைவில் துப்பறிவாளன் 2 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…