வசூலில் தெறிக்கவிட காத்திருக்கும் ‘துணிவு’..! முதல் நாளில் இத்தனை கோடியா.?

Default Image

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “துணிவு”. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படத்தின் ஆக்சன் காட்சிகள் மற்றும் அஜித்தின் நடிப்பு அருமையாக இருப்பதாகவும், படம் கண்டிபாக பிளாக் பஸ்டர் ஆகும் என கூறி வருகிறார்கள்.

இதனையடுத்து, படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் வசூலில் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் என்பதை விநியோகதஸ்தர்கள் போட்டுவைத்துள்ள கணக்கு விவரம் பற்றியை தகவல் தற்போது கசிந்துள்ளது.

அதன்படி, படம் தமிழகத்தில் மட்டும் 25 கோடி வரை வசூல் செய்யும் எனவும், இந்தியா முழுவதும் 40 கோடி வரை வசூல் செய்யும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் துணிவு திரைப்படம் முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்