அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் நடைபெறும் சம்பவங்களை பற்றி சொல்லியே தெரியவேண்டும். கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த நிலையில், விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் வாரிசு படத்தின் ரிலீஸ் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், துணிவு படத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதனையடுத்து, துணிவு திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், படம் பொங்கல் அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாரிசு, துணிவு ஆகிய படங்களுக்கு ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளியாகிறதா..? அல்லது ஒரு நாள் முன், பின் வெளியாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அது எப்படியோ இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதால் அஜித் -விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு அஜித் நடித்த “வீரம்” திரைப்படமும், விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் – விஜய் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…