OTT-யில் வெளியாகும் ‘துணிவு’…அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.!
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருந்தார். படத்தில் மஞ்சு வாரியர்,சமுத்திரக்கனி, வீரா, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அஜித் கேரியரில் அதிக வசூல் செய்த படமும் இந்த திரைப்படம் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் 230 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் 25 நாட்களை கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. இந்நிலையில், திரையரங்கில் படம் பார்க்காத ரசிகர்கள் துணிவு திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
It is time for the explosions to begin because Ajith Kumar is finally here! ????????????????
Thunivu is coming to Netflix on Feb 8th in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi and we cannot stay CHILLA CHILLA! ???? #ThunivuOnNetflix #NoGutsNoGlory pic.twitter.com/og49yHrRAF
— Netflix India South (@Netflix_INSouth) February 3, 2023
அதன்படி, துணிவு திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 8 -ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என OTT-நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, துணிவு படம் பார்க்காத பலரும் ஓடிடியில் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.