துணிவு படத்தின் அடுத்த பாடல் இது தான்.! ஜிப்ரான் கொடுத்த சூப்பர் அப்டேட்…
இய்குனார் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியர்,சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்- அந்த விஷயத்தில் ஷங்கரை ஓரம் கட்டிய தளபதி தம்பி அட்லீ.!?
இந்நிலையில், ஏற்கனவே படத்திலிருந்து சில்லா, சில்லா மற்றும் காசேதான் கடவுளடா என்ற இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, மூன்றாவது பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிப்ரான் கொடுத்துள்ளார்.
#Gangstaa ????????#கேங்ஸ்டா ????????
???? @ShabirMusic
— Ghibran (@GhibranOfficial) December 21, 2022
அதன்படி, துணிவு படத்தின் மூன்றாவது பாடல் கேங்ஸ்டா என்று தொடங்கும் எனவும், அந்த பாடலை பிரபல பாடகரான ஷபீர் சுல்தான் என்பவர் பாடியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். விரைவில் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.