துணிவு பாடல் எனது கேரியரில் மிக பெரிய ஹிட்டாகும்.! அனிருத் கூறிய அட்டகாசமான அப்டேட்….
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது “துணிவு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், எடிட்டிங் மற்றும் இசை கோர்க்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் துணிவு முதல் பாடல் குறித்த அப்டேட்டை கொடுத்திருந்தார். அந்த பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும், ‘சில்லா சில்லா’ என தொடங்கும் அந்த பாடலை வைசாக் எழுதியுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இதையும் படியுங்களேன்- இனி கவர்ச்சி வேண்டாம்…. அடக்க ஒடுக்கமாக மாறிய ஆண்ட்ரியா.! சோகத்தில் ரசிகர்கள்…
அதனை தொடர்ந்து, அந்த பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத் எனது ‘சில்லா சில்லா’ கேரியரிகல் மிக பெரிய ஹிட்டாகும்’ என கூறியுள்ளார். இதனால் ரசிகர்களுக்கு பாடல் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.