துணிவு கொண்டாட்டம் ஆரம்பம்…. அட்டகாசமான அப்டேட் கொடுத்த அஜித்.! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Published by
பால முருகன்

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு”  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

Thunivu Manju Warrier
Thunivu Manju Warrier [Image Source: Twitter]

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. நேற்று படத்தின் நாயகி மஞ்சு வாரியர் தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கி முடித்துக்கொடுத்தார். அதற்கான புகைப்படமும் அவரே தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு அறிவித்திருந்தார்.

இதையும் படியுங்களேன்- மீண்டும் இணையும் பிளாக் பஸ்டர் கூட்டணி.! AK63 படத்தின் தாறுமாறான அப்டேட்.!

Thunivu Dubbing work Completed Ajith [Image Source: Twitter]

அவரை தொடர்ந்து, நடிகர் அஜித்தும் தனது டப்பிங் பணியை இன்று தொடங்கி முடித்துக்கொடுத்துள்ளார். அதற்கான புகைப்படத்தை மஞ்சு வாரியார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதிக்கான அப்டேட்டுகள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

1 hour ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

2 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

2 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

11 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

13 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

14 hours ago