துணிவு கொண்டாட்டம் ஆரம்பம்…. அட்டகாசமான அப்டேட் கொடுத்த அஜித்.! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. நேற்று படத்தின் நாயகி மஞ்சு வாரியர் தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கி முடித்துக்கொடுத்தார். அதற்கான புகைப்படமும் அவரே தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு அறிவித்திருந்தார்.
இதையும் படியுங்களேன்- மீண்டும் இணையும் பிளாக் பஸ்டர் கூட்டணி.! AK63 படத்தின் தாறுமாறான அப்டேட்.!
அவரை தொடர்ந்து, நடிகர் அஜித்தும் தனது டப்பிங் பணியை இன்று தொடங்கி முடித்துக்கொடுத்துள்ளார். அதற்கான புகைப்படத்தை மஞ்சு வாரியார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதிக்கான அப்டேட்டுகள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Thunivu – #AjithKumar#ManjuWarrier | #Ghibran | #HVinoth pic.twitter.com/2bfLFA5HaH
— CineBloopers???? (@CineBloopers) November 4, 2022