இளையதளபதியுடன் மோத தமிழில் களமிறங்கும் அமீர்கான்! தீபாவளி அப்டேட்!!
தங்கல் படம் ஹிந்தியில் வெளியானது மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சீக்ரெட் சூப்பர் ஸ்டார் எனும் படத்தில் நடித்திருந்தார் அமீர்கான். அதன் பிறகு தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் அமிதாப்பச்சன் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சர்யா இயக்குகிறார்.
இப்படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் தெலுங்கிலும் அதே தீபாவளிதினத்தன்று வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU