ஆக்ஷன் அவதாரத்தில் கமல்ஹாசன்! பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது ‘தக் லைஃப்’ டீசர்!
கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் விடியோவாக 'தக் லைஃப்' படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.

சென்னை : நடிகர் கமலஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதை கொண்டாடும் விதமாக ‘தக் லைஃப்’ படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னமும், கமல்ஹாசனும் இணைகிறார்கள் என்ற போதே அதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.
இந்த நிலையில், கமல் பிறந்தநாளை முன்னிட்டு ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டீசரை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த தக் லைஃப் திரைப்படமானது அடுத்த வருடம் ஜூன் மாதம்- 5 ம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
இந்த தக் லைஃப் டீசரை பார்கையில், கமல்ஹாசன் முன்னதாக நடித்த குருதிபுனல், விஸ்வரூபம் படத்தினை நமக்கு நினைவுக்கு கொண்டு வருகிறது என்றே கூறலாம். விஸ்வரூபத்தை நினைவூட்டும் ஆக்சன் காட்சிகளும், குருதிபுனலில் வரும் கமல்ஹாசனின் முகத்தோற்றமும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.
மேலும், இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான், இந்த படத்திற்குப் பக்கபலமாய் அமைவார் என நம்பிக்கை ரசிகர்களுக்கு பிறந்துள்ளது. வெளியான இந்த டீசரில் அமைந்திருந்த பின்னணி இசை அந்த அளவிற்கு பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
அதன்பின், அவருடன் இணைந்து நடித்திருக்கும் சிம்புவின் காட்சிகளும் 3 நொடிகள் வருகிறது. அதில் அவரது தோற்றமும், அவர் செய்யும் ஆக்ஷனும், பெரிய திரையில் இருவரும் (கமல்&சிம்பு) ஒன்றாக வருவார்களா? என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கி இருக்கிறது.