ஜோஜூ ஜார்ஜ்: கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படமான ‘தக் லைஃப்’ திரைப்பட ஷூட்டிங்கில் பிரபல நடிகரான ஜோஜூ சார்ஜ் காயத்திற்கு உள்ளாகி உள்ளார்.
பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், பாலிவுட் நடிகரான அலிஃபஸல், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல திரைபிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் பட்டாளத்தாலும், குறிப்பாக 37 வருடங்களுக்கு பிறகு மணி ரத்னமும், கமல்ஹாசனும் இணைந்து பணியாற்றுவதாலும், இந்த படத்திற்கு ஒரு தனிப்பட்ட எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான ஜோஜூ சார்ஜ் நடித்து வருகிறார். மலையாள திரைப்படமான ‘இரட்டா’ திரைப்படம் மூலம் பிரபமான இவர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்தது ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்திற்கு படப்பிடிப்பு என்பது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கான ஒரு காட்சியில் கமல்ஹாசன், நாசர், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் ஹெலிகாப்டரிலிருந்து குதிக்க வேண்டும். இந்த காட்சியை படமாக்கும் போது ஜோஜூ சார்ஜ் துரதிஷ்டவசமாக இடறி விழுந்துள்ளார். இதில் அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தொடர்ந்து 2 வாரங்கள் ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் ஓய்வில் இருக்க கொச்சிக்கு சென்றுள்ளார் என கூறி வருகின்றனர். இந்நிலையில், அவர் கையில் ஸ்டிக் வைத்து நடந்து வரும் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…