பிரபல நடிகர் படத்திற்கு தீடீர் சிக்கல் !!!
மாதவன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர். இவரின் படங்கள் அனைத்திலும் இவர் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் அவர்கென்றே ஒரு தனி இடத்தை இன்று வரையும் தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். ராக்கெட்ரி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன், மாதவனும் சேர்ந்து இயக்குகிறார்கள். தற்போது ஒரு சிக்கல் காரணமாக ஆனந்த் மகாதேவன் இந்த படத்தை இயக்கவில்லையாம். எனவே இப்படத்தை நடிகர் மாதவன் இயக்க இருக்கிறாராம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.