நடிகர் விஜய் மீது செருப்பு வீசியதை தவிர்த்திருக்கலாம் விஷால் பேட்டி!

vishal

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில், இன்று நடிகர் விஷால், ஆர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின் நடிகர்கள் விஷால், ஆர்யா பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.

வெளிநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய விஷால் காலை 11 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில், விஜயகாந்த் காலடியில் விழுந்து கும்பிட்ட விஷால், படப்பிடிப்பு காரணமாக கேப்டனின் இறுதி ஊர்வலத்துக்கும் நல்லடக்கத்திற்கும் வரமுடியவில்லை என கதறி அழுதபடியே மன்னிப்பு கோரினர்.

அஞ்சலி செலுத்திய பிறகு, நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி, நல்ல மனிதர், தைரியமான அரசியல்வாதி ஒருவர் மறைந்த பிறகுதான் சாமி என்று அழைப்பார்கள். ஆனால், கேப்டன் உயிருடன் இருக்கும்போதே மக்கள் அவரை சாமி என்று அழைத்தார்கள் என்று கூறினார்.

நடிகர் சங்க கட்டத்திற்கு விஜயகாந்த் பெயர் – விஷால் !

குறிப்பாக, விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 19ஆம் தேதி சென்னையில் கூட்டம் நடைபெறும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதனிடையே செய்தியாளர் ஒருவர் விஜய் மீது காலணி வீசிய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால், கூட்டமாக இருக்கும் பொழுது, யாரு செருப்பு தூக்கி அடிச்சா அப்படினு பாக்க முடியாது.

ஆனால், அந்த கூட்டத்தில் இந்த அவர் மீது செருப்பு வீசியதை தவிர்த்திருக்கலாம். விஜய்க்கு பிடித்த நடிகர் விஜயகாந்த், விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான தூணாக இருந்தவர் அவரை பக்க வந்திருக்காரு இது நடந்திருக்க கூடாது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்