கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மீது காலனி வீசிய சம்பவம் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளனர்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலமானார். அப்போது அன்று இரவு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் நேற்று வருகை தந்தார். அஞ்சலி செலுத்தும்போது விஜயகாந்தின் உடலை பார்க்க முடியாமல் கண்கலங்கி அழுதார். கடைசி 10 நொடிகள் விஜயகாந்தின் முகத்தையே பார்த்துக்கொண்டு கண்கலங்கினார்.
பின்னர், அஞ்சலி செலுத்துவிட்டு விஜயகாந்த் குடும்பத்தினருக்கும் ஆறுதல் வீடு திரும்புகையில், கூட நெரிசலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலனியை விஜய் மீது வீசினார். அப்போது கூட்டத்தில் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவ தொடங்கியது. இந்நிலையில், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகார் கடிதத்தில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அன்று நடிகர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10:30 மணி அளவில் தளபதி விஜய் அவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்த தளபதி விஜய் அவர்களின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை கழற்றி தளபதியை நோக்கி எரிந்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் சிந்திய விஜய்!
இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் ரசிகர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அருவருக்கத்தக்க இம்மாதிரியான செயலில் ஈடுபட்ட, அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…