இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம்.
இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு கிரிக்கெட் படமாக உருவான இதற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருவதால் வசூலில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த திரைப்படத்திற்கு இந்த அளவிற்கு ஒரு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள காரணமே ரஜினிகாந்த் என்றே கூறலாம்.
மீண்டும் சினிமாவுக்கு வரும் சமந்தா.! முதல் படம் என்ன தெரியுமா?
லால் சலாம் திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
படத்தில் ரஜினிகாந்த் நீட்டிக்கப்பட்ட கேமியோவில் நடித்திருந்தாலும், படத்தின் முதல் நாள் வசூலான ரூ.3.55 கோடி கிடைத்தது. இரண்டாம் நாளாக ரூ.3.25 கொடியும் மூன்றாம் நாளான நேற்று ரூ.3.00 கோடி என மொத்தம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கண்டிப்பாக வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…