“பிரியங்காவை அப்படி பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வனிதா ஆதங்கம்!

மணிமேகலை பிரச்சினையில் பிரியங்காவை தப்பாக பேசுபவர்களை செருப்பால் இல்லை எதைவேண்டுமானாலும் வைத்து அடிக்கலாம் என வனிதா ஆதங்கக்கத்துடன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

vanitha priyanka deshpande vs manimegalai

சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை பரபரப்பான சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சை எப்போது முடிவடையும் என்பது தான் பெரிய கேள்வியாகவும் இருந்து வருகிறது. இவர்களுடைய, பிரச்சினை குறித்து சின்னத்திரை பிரபலங்கள் பேசுவதால் என்னவோ, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைக்காமல் இருக்கிறது.

ஏற்கனவே, புகழ், சரத், அமீர், பாவனி, உள்ளிட்ட பிரபலங்கள் இந்த பிரச்சனைகள் குறித்து பேசியிருந்தார்கள். அந்த வகையில், நடிகை வனிதா இந்த விவகாரம் குறித்து தெளிவான கருத்தை முன் வைத்துள்ளார். சென்னையில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் மணிமேகலை பிரியங்கா விஷயத்தில் பிரியங்காவை மற்றும் தவறாக பேசுபவர்களுக்கு செருப்படி கொடுக்கவேண்டும் என பேசினார்.

இது பற்றி பேசிய வனிதா “மணிமேகலைக்கு திருமணம் முடிந்தது அதனால், அவருக்கு சுயமரியாதை அதிகமாக இருக்கிறது. பிரியங்காவிற்கு திருமணம் முடிந்து கணவர் இப்போது இல்லாத காரணத்தினால், அவருக்கு சுயமரியாதை இல்லை என்று கூறுபவர்களை “செருப்பால்” அடிக்க வேண்டும் அப்படி பேசுபவர்களை எதைவேண்டுமானாலும்  அடிக்கலாம்”  என காட்டமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய வனிதா ” ஒரு விவாகரத்து பெற்று பிரிவதற்கும் அவர்களுடைய கேரக்டருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அதனால் அப்படி தவறாக யாரும் பேசவேண்டாம். பிரியங்காவின் கேரக்டரை தவறாக  பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதனை பார்த்துக்கொண்டு அதற்காக மணிமேகலை வீடியோ போடுறாங்க.

நான் மணிமேகலையிடம் சொல்லி கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான். இப்போது நீ நன்றாக வளர்ந்து வருகிறாய். அதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் தனக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றால் சுயமரியாதை முக்கியம் என கூறி வெளியேறுவதில் எந்த தப்பும் இல்லை.

ஆனால், அதே சமயம் மற்றோரு பெண்ணுடைய பெயர் இப்படி அசிங்கப்படுவதை பார்த்து அதனை கண்டுகொள்ளாமல் வீடியோ போடுவது ரொம்பவே தவறு. ஒரு பெண்ணுடைய மனதை பெண் தான் புரிந்துகொள்ளவேண்டும்” எனவும் வனிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்