தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது – நடிகர் சூரி பேட்டி.!

Default Image

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண மோசடி புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை தன்னிடம் 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் தன்னிடம் நிலம் வாங்கி தருவதாக அந்த பணத்தை அவர் வாங்கி வைத்திருந்தார் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அந்த வழக்கிற்காக நேற்று நடிகர் சூரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். ஆஜராகி, இந்த வழக்கு குறித்து வாக்குமூலம் அளிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆஜரான பின் நடிகர் சூரி அளித்த பேட்டியில் அவர் கூறியது” என்னுடைய வழக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பண விவகாரத்தில் ஏமாந்து உள்ளேன். இந்த வழக்கு அடையார் காவல் நிலையத்தில் போய்க்கொண்டிருந்தது. அங்கிருந்து திருப்திகரமான விசாரணை இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தோம்…

அங்கிருந்து, இப்போ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், துணை ஆணையர் தலைமையிலான விசாரணை நடக்கிறது. அது விஷயமா நான் வந்திருக்கிறேன்.. நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என ரொம்ப நம்பிக்கையாக இருக்கிறேன்.நேர்மையாக உழைத்து கஷ்டப்பட்டு இந்த இடத்தில் இருக்கிறேன்…கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என நினைக்கிறன். அந்த கடவுள் மாதிரி, நீதிமன்றத்தையும் காவல்துறை மட்டுமே நம்பி உள்ளேன் தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது”என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்