தொட்ரா படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடுகிறார் சினேகா !
சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ் அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.
நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.
வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார்.
தொட்ரா படத்தை சினிமாத்தனம் இல்லாத சினிமா என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தில் பாடல் காட்சிகளைத்தவிர அனைத்துக் காட்சிகளையுமே மிக இயல்பாகப் படமாக்கியுள்ளோம்.
காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக நிஜமான கோவில் திருவிழாக்கள் நடக்கும் இடங்களுக்கே சென்று மக்கள் அறியாமல் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து படமாக்கியது புதிய அனுபவமாக இருந்தது.
இப்படத்தின் முதல் பாடல் ஒரு காதல் களவாணி என்ற பாடலை நாளை வெளியிடபோவதாக நடிகை சினேகா வெளியிடுகிறார் .
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் .