இந்த வருடம் நடைபெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது! நடிகை கஸ்தூரி குற்றசாட்டு!

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் ஆத்தா உன் கோயில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது நிறைவுபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி இடையில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக கலந்து கொண்டார். இதில் பல கலவரங்கள் வெடித்தது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய கஸ்தூரி, பிக்பாஸ் நிகழ்ச்சியானது சமூக பொறுப்பான நிகழ்ச்சி அல்ல என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி பெண்களுடைய மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளது. இனிவரும் பிக்பாசிலாவது பொழுதுபோக்கு மட்டும் இல்லாமல் சமூக பொறுப்பும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025