இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ரஜினி பிறந்த நாள் அன்று அவருடைய ரசிகர்கள் அவருடைய வீட்டிற்கு வெளிய நின்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருப்பார்கள்.
ரஜினியும் வருடம் வருடம் வெளியே வந்து தன்னுடைய அன்பான ரசிகர்களுக்கு கையை அசைத்து தனது முகத்தை காட்டிவிட்டு செல்வார். ஆனால், இந்த வருடம் அந்த சம்பவம் நடைபெறாது என கூறப்படுகிறது. ஏனென்றால், நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளாராம்.
எனவே, ரஜினிகாந்த் ஊரில் இல்லை என்றும், ரசிகர்கள் யாரும் வீட்டின் முன் காத்திருக்க வேண்டாம் என அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினி வீட்டில் இல்லாதது தெரியாமல் வீட்டிற்கு முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும், அவர் தற்போது நடித்து வரும் “ஜெயிலர்” திரைப்படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…
மெக்சிகோ: புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார். இவரது மறைவு WWE-ன்…
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…