இந்த மனசு யாருக்கும் வராது! ‘GOAT’ படத்தில் விஜய் ஒத்துக்கொண்ட பெரிய விஷயங்கள் !

GOAT படத்தில் சக நடிகர்களுடைய ரெபரன்ஸ் காட்சிகள் வைக்க விஜய் அனுமதி கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் அவரை ஈகோ இல்லாத மனிதர் என பாராட்டி வருகிறார்கள்.

vijay goat

சென்னை : விஜய் நடிப்பில் வெளியான GOAT படம் மக்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் சக நடிகர்களுடைய ரெபரன்ஸ் காட்சிகளும் வந்து சர்ப்ரைஸாக  திரையரங்கையே அதிர வைத்தது என்றே சொல்லலாம். ஒரு நடிகர் காட்சி மட்டுமில்லாமல் ரஜினி, கமல், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என பலருடைய ரெபரன்ஸ் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

இந்நிலையில், அப்படி GOAT படத்தில் விஜய் ஒத்துக்கொண்ட ரெபரன்ஸ் காட்சிகள் பற்றி பார்க்கலாம். முதலில், படத்தில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் இடம்பெற்ற BGM-ஐ படத்தில் தோனி வரும் காட்சியில் ஒளிபரப்பு செய்ய சம்மதம் தெரிவித்தார். அதைப்போல, ரஜினி மட்டுமில்லை கமல்ஹாசன் நடித்த குணா படத்தில் அவர் பேசும் வசனத்தை GOAT படத்தில் விஜய் பேச சம்மதம் தெரிவித்திருப்பார்.

மேலும், சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் வால்பேப்பர் கொண்ட ரெபரன்ஸ் காட்சியையும் வைத்துக்கொள்ள விஜய் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதைப்போல, சினிமாவில் விஜய் -அஜித் என்றாலே போட்டி தான். அப்படி இருக்கையில், ரசிகர்கள் இருவரும் இணைந்து படத்தை கொண்டாடவேண்டும் எனப் படத்தில் அவருடைய மங்காத்தா BGM-ஐயும், அவருடைய பெயரையும் பயன்படுத்த அனுமதி அளித்திருப்பார்.

மேலும், படத்தில் ஒரு காட்சியில் பிரஷாந்த் விஜயின் சட்டையை பிடித்து சண்டையில் ஈடுபடுவது போல ஒரு காட்சி அமைந்திருக்கும். இதை நாம் படத்தின் ட்ரைலர் காட்சியிலே பார்த்திருப்போம். ஆனால், திரையுலகின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் விஜய் இது போன்ற காட்சிகளுக்கும் அவர் சம்மதம் தெரிவித்திருப்பார்.

விஜய் அடுத்ததாக 69-வது படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி தனது அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார். எனவே, அவர் சினிமாவை விட்டு போன பிறகு அவருடைய இடத்திற்கு சிவகார்த்திகேயன் தான் வருவார் அவருக்கு தான் விஜயை போல குடும்ப ரசிகர்கள் உள்ளனர் என்கிற அரசல் புரசலான பேச்சு உள்ள சூழலில், விஜய்யே அதனை சூசகமாக GOAT படத்தில் சொல்லியிருக்கிறார்.

தன்னுடைய இடத்திற்கு வேறு யாரும் வந்துவிடக்கூடாது என நினைக்கும் இந்த காலத்தில் சிவகார்த்திகேயனுக்கு GOAT படத்தில் கேமியோ கொடுத்து கோலிவுட்டை நீங்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என விஜய் சூசகமாக கூறியதை பார்த்த ரசிகர்கள் ஈகோ இல்லாத ஒரு மனிதர் விஜய் என அவரை பாராட்டி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation