விக்ரம்-3யில் சூர்யா இதைத்தான் செய்ய போகிறார்.! தெறிக்கும் அப்டேட் கொடுத்த கமல்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவரை பார்க்கிறேன். படம் மிகவும் அருமையாக இருக்கிறது விக்ரம் 3 பார்ட்டுக்கு வெயிட்டிங் என தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அனைவர்க்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை கமல்ஹாசன் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ” தரமான திரைப்படத்தைத் தாங்கிப்பிடிக்கத் தமிழ் ரசிகர்கள் தவறியதில்லை. திறமையான தரமான நடிகர்களையும்தான். அந்த வெற்றி வரிசையில் என்னையும் எங்கள் `விக்ரம்’ படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.
திரு. அனிருத், திரு. கிரீஷ், எடிட்டர் திரு. பிளோமின், திரு. அன்பறிவ், திரு சதீஷ்குமார் தொடங்கி பெயர் தெரியாமல் பின்னணியில் வேலைசெய்த அனைவருக்கும் உங்கள் பாராட்டுக்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியதுதான் நியாயம்.
தம்பிகள் திரு. விஜய் சேதுபதி, திரு. ஃபகத் பாசில், திரு. நரேன், திரு. செம்பன் வினோத் என வீரியம் மிக்க நடிகர் படை வெற்றியின் முக்கியக் காரணம். கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்கை அதிரவைத்த என் அருமை தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார்.
அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய்க் காட்டிவிடலாம் என்றிருக்கிறேன். இயக்குநர் திரு. லோகேஷ் அவர்களுக்கு சினிமா மீதும் என் மீதும் இருந்த அன்பு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஊழியன் உங்கள் நான்” என்று கூறியுள்ளார்.
Thank you
With love ,
Kamal Haasan@ikamalhaasan @Dir_Lokesh @Udhaystalin @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @spotifyindia @SonyMusicSouth @RedGiantMovies_@actor_nithiin @anbariv @girishganges @philoedit pic.twitter.com/nZnB71r3dF— Raaj Kamal Films International (@RKFI) June 7, 2022