பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு இதுதான்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘RC15″. இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். 200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் தலைப்பு என்னவென்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#GAMECHANGER it is…????????https://t.co/avGa74S8vH
Mega Powerstar @alwaysramcharan @shankarshanmugh @advani_kiara @DOP_Tirru @MusicThaman @SVC_official #SVC50 #RC15 #HBDGlobalStarRamCharan pic.twitter.com/2htttRsvPx
— Sri Venkateswara Creations (@SVC_official) March 27, 2023
அதன்படி, இந்த திரைப்படத்திற்கு GAMECHANGER என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று நடிகர் ராம் சரணின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்திற்கான தலைப்பு மோஷன் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.