சூர்யாவுடன் படம் பண்றது உறுதி.! இது தான் கதை.! – சுதா கொங்கரா.!

இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாவே இணையத்தில் செய்திகள் பரவி வந்தது.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய சுதாகொங்கரா “நான் சூர்யாவுடன் படம் பண்ணுவது 100% உறுதி. இந்தப்படம் சூரரைப்போற்று படத்தை விட எனக்கு ரொம்பவே சவாலான படமாக இருக்கும் என நான் நினைக்கிறன். மிகவும் பெரிய பட்ஜெட் படம்.
இந்த படம் பயோபிக் கிடையாது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவுள்ளது. அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்த விஷயம். அது தான் நான் சூர்யாவை வைத்து இயக்கவுள்ள படம்.” என தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025