SK 21 படத்தின் கதை இதுதான்.! இணையத்தில் கசிந்த ரகசிய தகவல்.!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21-வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளாராம்.படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் காஷ்மீர் சென்று ராணுவ பயிற்சி எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில், SK21 திரைப்படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி. இந்த படம் முழுக்க, முழுக்க ராணுவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. சம்பவங்கள் எல்லாம் 1960ல் நடந்ததுபோன்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எடுக்க முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்க உள்ளதால், இதற்காக, சிவகார்த்திகேயன் மும்பையில் தீவிர நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறாராம். கண்டிபாக சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் இந்த படம் மறக்க முடியாத அளவிற்கு சிறப்பான படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.