அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் சிறப்பு விருந்தினர் இவர் தான்!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, 75 நாட்களை கடந்து, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் சிறப்பு விருந்தினராக வந்து, தற்போது வெளியே சென்றுள்ளனர்.
இந்நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக, பிக்பாஸ் முதல் சீசனில் 2-வது இடம் பிடித்த சினேகன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சினேகன் தனது ட்வீட்டர் பக்கத்தில், பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் சென்று உள்ளே இருக்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. என பதிவிட்டுள்ளார்.
#பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் உள்ளே சென்று இருக்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்.
கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.#BiggBossTamil3 #BiggBossTamil— கவிஞர் சினேகன் (@Kavignar_Snehan) September 8, 2019