விக்ரம் படத்தை மிஸ் செய்ததற்கு இதுதான் காரணம்…மனம் திறந்த மாஸ்டர் லாரன்ஸ்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். அதிரடி ஆக்சன் கலந்து இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சந்தனம் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்றே கூறலாம். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க விருந்து அவர் இல்லயாம். அவருக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் தான் நடிக்கவிருந்தாராம்.
இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் “விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி நடித்த கேரக்டரில் நடிக்க வேண்டியது நான்தான். ஆனால் நான் வேறே படங்களில் நடித்து வந்ததால் தேதி பிரச்சனையால் அது தவறிவிட்டது” என கூறியுள்ளார்.
மேலும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் நேற்று வெளியான ருத்ரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.