கல்யாணத்துக்கு அப்புறம் சினிமாவை விட்டு விலக காரணம் இது தான் – ஸ்ரீதேவி விஜயகுமார்!

Sridevi Vijaykumar நடிகையும், நடிகர் விஜயகுமாரின் மகளுமான ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழ் சினிமாவில் சிறிய வயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இருப்பினும் ஹீரோயினாக இவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது என்றே சொல்லவேண்டும். அந்த வகையில், பிரியமான தோழி, தித்திக்குதே, நின்னே இஷ்டப்பட்டனு, தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
இவர் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த காலத்தில் அதாவது கடந்த 2009-ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றே சொல்லலாம். திருமனத்திற்கு பிறகு வீரா எனும் தெலுங்கு படத்திலும் , லக்ஷ்மணா கன்னட படத்திலும் மட்டுமே நடித்து இருந்தார்.
பிறகு அப்படியே சினிமாவை விட்டு விலகி தனது குடும்ப வாழ்க்கையை பார்த்துக்கொண்டார். இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் படங்களில் இருந்து விலகி இருப்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய ” திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று என்னை யாரும் கூறவில்லை. ஆனால் என் கணவர் என்னை சினிமாவில் நடிக்க சொன்னார்.
உனக்கு நல்ல திறமை இருக்கிறது நீ நடிக்கும் கதாபாத்திரம் நன்றாக இருக்கும் மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நீ திரும்பவும் நடிக்கலாம். திருமணத்திற்குப் பிறகு நான் ஒரு பதிய வாழ்க்கையைத் தொடங்குவது கட்டாயமான ஒன்று. எனவே, அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு பழக சிறிது நேரம் பிடித்தது.
கிட்டத்தட்ட எனக்கு ஒரு ஐந்து வயதில் சினிமாவுக்கு வந்தேன். அந்த சமயம் எல்லாம் நான் சினிமாவை விட்டு விலகி இருந்தது இல்லை. திருமணத்திற்குப் பிறகு எனக்கே தெரியாமல் எதிர்பாராதவிதமாக இடைவெளி ஏற்பட்டது. மீண்டும் கண்டிப்பாக நடிப்பேன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டு வருகிறேன்” எனவும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025