சிம்பு வாக்களிக்க வராததற்கு காராணம் இதுவா !
தமிழகம் முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் உற்சாகமாக தங்களது வாக்குகளை அளித்தனர்.
மேலும் திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபதிர்கள்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்நிலையில் சென்னை தி.நகரில் லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர் கூறுகையில்,
சிம்பு எப்போதும் வாக்களிக்க தவறாமல் வந்துவிடுவார், ஆனால் தற்போது அவர் லண்டனில் முக்கிய பணி காரணமாக சென்றதால்,அவரால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என கூறினார்.