பேச்சுலர் படத்தை மிஸ் பண்ணதுக்கு காரணம் இது தான்…மனம் திறந்த நடிகை வாணி போஜன்.!
ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி ஆகியோர் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ரொமாண்டிக் திரைப்படம் ” பேச்சுலர் “. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் என்பவர் எழுதி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் இளைஞர்களுக்கு மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு மிகப்பெரிய ஹிட்டானது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதலில் திவ்ய பாரதிக்கு பதிலாக நடிக்கவிருந்தது நடிகை வாணி போஜன் தான். இந்த தகவலை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பேச்சுலர் படம் ரொம்பவே நல்ல படம்.
இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு முதலில் வந்தது. ஆனால், இந்த படத்திற்கு நான் செட் ஆவேனா என்று எனக்கு யோசனை வந்தது. ஏனென்றால், இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்தால் நம்மளை ரசிங்கர்கள் ஏற்றுக்கொள்வார்களா..? என்ற கேள்வி எனக்குள் ஏற்பட்டது.
அந்த படத்தில் நெருக்கமான காட்சிகள் இருப்பது எனக்கு கடைசியாக தெரியும். நான் அந்த படத்தில் நடித்திருந்தால், இயக்குனர் எனக்காக அப்படத்தில் சில காட்சிகள் மாற்றியிருப்பார். ஆனால், எனக்காக எந்த காட்சியையும் இயக்குனர் மாற்றக்கூடாது. இதன் காரணமாக நானே படத்தில் இருந்து விலகிவிட்டேன்” என கூறியுள்ளார்.