முக்கியச் செய்திகள்

Abhirami : விருமாண்டி படத்துக்கு அப்புறம் சினிமாவை விட்டு போன காரணம் இது தான்! மனம் திறந்த அபிராமி!

Published by
பால முருகன்

கமல்ஹாசன் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு சமஸ்தானம், ஸ்ரீராம், உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இந்த படங்கள் எல்லாம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.

ஆனால், விருமாண்டி படத்தில் நடித்து முடித்த பிறகு அவருடைய மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்றே கூறலாம். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அவருடைய பெயரும் வெளியே தெரிந்தது. ஆனால், இந்த படத்தில் நடித்த பிறகு ஒரு சில ஆண்டுகளாக அபிராமி சினிமாவில் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகினார்.

திடீரென அபிராமி சினிமாவை விட்டு விலகிய காரணத்தால் அந்த சமயம் பல வதந்தி தகவல் பரவியது. ஆனால், இதுவரை விருமாண்டி படத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் என் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்ற காரணத்தை பற்றி அபிராமி  பேசாமல் இருந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர்  ” எனக்கு படிப்பு மீது ஆர்வம் அதிகமாக இருந்தது எனவே நான் விருமாண்டி படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்திலே வெளிநாட்டுக்கு சென்று படிக்கவேண்டும் என முடிவெடுத்து அதற்கான விரவங்களை நிரப்பி பதிவு செய்து இருந்தேன். விருமாண்டி படத்தில் நடித்து முடித்த பிறகு நான் அங்க செல்ல நேரம் சரியாக இருந்தது.

விருமாண்டி முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று நன்றாக படித்தேன் அங்கு தான் என்னுடைய டிகிரியை நான் முடித்தேன். அங்கு எனக்கு வேலையும் கிடைத்தது 6 வருடங்கள் அங்கு தான் வேலை செய்தேன். பிறகு விஸ்வரூபம் படத்தில் டப்பிங் பேசுவதற்காக வாய்ப்பு கிடைத்தது அதில் பேசினேன் அதிலிருந்து இந்த துறையை விட்டு நாம் என் போகவேண்டும் என முடிவெடுத்து மீண்டும் நடிக்க தொடங்கி விட்டேன்” எனவும் அபிராமி தெரிவித்துள்ளார். மேலும் அபிராமி தற்போது விஜய் சேதுபதியின் 50-வது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

3 minutes ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

57 minutes ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

2 hours ago

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

2 hours ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

3 hours ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

4 hours ago