சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி தள்ளிசெல்ல இது தான் காரணம்! அசால்ட்டாக கூறிய இயக்குனர் பி.வாசு!

P Vasu about Chandramukhi2

சந்திரமுகி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இயக்குனர் பி வாசு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அதனுடைய இரண்டாவது பாகத்தை இயக்கியுள்ளார். இந்த இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். மிக்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆனால், முன்னதாக இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதியே வெளியாகவேண்டியது. சில காரணங்கள் படம் அந்த தேதியில் ரிலீஸ் ஆகாமல் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்ற காரணத்தை இயக்குனர் பி.வாசு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி 2 படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத் சென்றுள்ள பி வாசு இது குறித்து பேசினார். அதில் ” படம் வெளியாகும் இறுதி நேரத்தில் படத்தில் இருந்த 480 காட்சிகள் கிட்ட காணாமல் போய்விட்டது. 150 டெக்னீஷியன்கள் ஐந்து நாட்கள் கடினமாக உழைத்து தேடியும் அதனை மீட்டெடுக்க முடியவில்லை.

சரியாக கடந்த 8-ம் தேதி இரவு எனக்கு அழைப்பு வந்தது. 480 காட்சிகள் இல்லை அழிந்துவிட்டது என்று. இந்த தகவலை கேட்டவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு இறுதியாக அந்த காட்சிகள் அனைத்தையும் எடுத்துவிட்டோம். இது தான் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல காரணம் இன்னொரு படம் போட்டியாக இருப்பதால் சந்திரமுகி 2 படத்தை தள்ளிப்போடவில்லை எனவும் பி வாசு தெரிவித்துள்ளார். படம் வெளியாகும் சமயத்தில் இப்படியான அதிர்ச்சியான விஷயம் நடந்திருப்பதை அசால்ட்டாக பி.வாசு கூறுவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்