நடிகை சமந்தா புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருப்பதற்கு இது தான் காரணம்!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஓ பேபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்த இவர், அதன் பின் எந்த புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. இதற்க்கு காரணம் என்னவென்றால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவதாகவும், இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சென்னையில் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.