தர்பார் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம்…மனம் திறந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.!
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தாலும் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது என்றே கூறலாம்.
இந்த நிலையில், தர்பார் படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “தர்பார் படத்தை மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஏனென்றால், ரஜினி சார் ஆகஸ்ட் மாதம் அரசியல் கட்சி தொடங்க இருந்தார். எனவே ரஜினி சாரை வைத்து எடுக்கும் படத்தை நான் தவறவிட விரும்பவில்லை. என் மீது இருந்த அதீத நம்பிக்கையும், சரியான திட்டமிடாதலும்தான் படத்தின் தோல்விக்கு காரணம் ” என்று கூறியுள்ளார்.
மேலும், ஏ.ஆர். முருகதாஸ் தற்போது கெளதம் கார்த்திக் நடித்துள்ள ஆகஸ்ட் 16 1947 படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாகிறது. விரைவில் முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.