அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் கதறல் ! காரணம் இது தானா
ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் திரைப்படம் வெளியாகியது.
இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை வெளியிட்டார். இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து உள்ளார்கள்.
இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முதல் நாள் முதல் கட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றி தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இக்கருத்தில் படம் சிறப்பாக உள்ளதாகவும் கூறினார்.ஆனால் படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி குரல் சரியாக அமையவில்லை என அதிகமான ரசிகர்கள் தங்களது கருத்தை பதிவை செய்தனர்.