தடம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தன்யா ஹோப். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். பிறகு இவருக்கு தமிழில் சந்தானத்திற்கு ஜோடியாக கிக் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கிக் படத்தில் நாம் நடித்தால் நன்றாக இருக்கும் தமிழ் சினிமாவில் அடுத்ததாக தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என யோசித்து இந்த படத்தில் நடித்தாராம்.
ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். சந்தானமும் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து தான் காத்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை காமெடி கதைக்களத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அடி வாங்கியது.
ரொம்ப பாவம்! மன வருத்தத்தில் ‘குட்டி ஜானு’… காரணம் என்ன தெரியுமா?
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்த காரணத்தை பற்றி நடிகை தன்யா ஹோப் பேசி உள்ளார். இது குறித்து பேசிய தன்யா ஹோப் ” எனக்கு பட வாய்ப்புகள் வராத சமயத்தில் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன். பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்றாலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இருந்தாலும் எனக்கு நகைச்சுவை கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அப்படி எதாவது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நான் விரும்பினேன். படத்தின் கதையை கேட்கும்போது எனக்கு மிகவும் பிடித்தும் இருந்தது. எனவே, இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் நமக்கு அடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நடித்தேன்.
படம் வெளியாகி படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. இருந்தாலும் படத்தின் படப்பிடிப்பின் போது கோவை சரளா போன்ற பெரிய பிரபலங்களுடன் பேசும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்ததை நினைத்து சந்தோஷ பட்டுக்கொள்கிறேன். அவர் எனக்கு அட்வைஸ் செய்த விஷயங்கள் எல்லாம் என்னுடைய மனதில் அப்படியே இருக்கிறது” எனவும் நடிகை தன்யா ஹோப் தெரிவித்துள்ளார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…