விக்ரம் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறுகிறது.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..
ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் அதிரடி திரைப்படம் “விக்ரம்”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக ஒரு மாதம் இருப்பதால் படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் விழா வரும் மே 15-ஆம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த இடத்தில் நடைபெறும் என்பதை அறிவிக்கவில்லை.
இதனால், எங்கு இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விக்ரம் திரைப்படத்தின் பிரமாண்டமான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 15-ம் தேதி மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#KamalHaasan #VikramFromJune3 #VikramAudioLaunch #VikramTrailer@ikamalhaasan @Udhaystalin @Dir_Lokesh @anirudhofficial @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ @DisneyPlusHS @vijaytelevision @disneyplusHSTam https://t.co/Vstu14TaBd
— Raaj Kamal Films International (@RKFI) May 10, 2022