கமல் சொன்ன சீக்ரெட் அட்வைஸ்… லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கு இது தான் முக்கிய காரணம்.!
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 அதிரடி திரைப்படங்களை கொடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளியான இந்த நான்கு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டது.
இதில் குறிப்பாக விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியாகி இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட் பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
இதனையடுத்து படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, நேற்று சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் வெற்றிவிழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய லோகேஷ் கனகராஜ் “எல்லாரும் என்னை “யூனிவெர்ஸ்” என்று சொல்லும் போது கொஞ்சம் பயமா இருக்கு…. இந்த இடத்தை எனக்கு கமல் சார் தான் கொடுத்தார்.. .அதனால் , அவருக்கு படம் பண்ணும்போது சாதாரணமாக எல்லாம் பண்ணமாட்டேன். இத்தனைக் கதாபாத்திரங்களைப் படத்தில் கொண்டுவந்து, புதுமுயற்சியுடன் படம் செய்வதற்கு எனக்கு முழு சுதந்திரம் கொடுத்ததும் அவர் தான். அதுக்கு ரொம்ப..ரொம்ப நன்றி கமல் சார்”.
கமல் சார் கிட்ட ஒரு படத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். எனவே நான் இப்படத்திற்கு உண்மையாக இருந்து பணியாற்றினேன். படம் வெற்றி பெற்றவுடன் கமல் சார் எனக்குக் கொடுத்த அட்வைஸ், “உன்னுடைய பணி வெற்றிபெற்றது.
இதையும் படியுங்களேன்- விக்ரம் ரயில் அல்ல “ராக்கெட்”.! தமிழகத்தில் ஷேர் இதுதான்.! உண்மையை போட்டுடைத்த உதயநிதி.!
உன் வேலை முடிந்தது. எனவே உடனே ஆபிஸ் சென்று அடுத்த வேலையைப் பார். அடுத்த படத்திற்கு அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளதே” என்றார் விக்ரம் படம் பெரிய வெற்றிபெற்றுள்ளது. அதனால் அடுத்த படத்திற்கு எளிதாக வேலை செய்துகொள்ளலாம் என்றில்லாமல் இன்னும் அதிகமாக உழைப்பேன் என தெரிவித்துள்ளார்.