அந்த அம்மையாரிடம் தோற்ற காண்டு.! அதுதான் இந்த ஆண்டவர் பாட்டு.! கஸ்தூரி விளாசல்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல என்ற பாடல் நேற்று வெளியானது.
நீண்ட ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் தான் நடித்துள்ள விக்ரம் படத்தில் “பத்தலபத்தல” என்ற ஒரு குத்துப்பாடலை அவரே எழுதி அனிருத் இசையில் கமலே பாடியிருந்தார். இந்த பாடல் நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது. இந்த பாடலில் நிறைய அரசியல் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த பாடலை பற்றி பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளபக்கங்களில் தெரிவித்து வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கஸ்தூரி சர்ச்சை கூறிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கஸ்தூரி தெரிவித்திருப்பதாவது ” சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல் வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு” என்று பதிவிட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வானதி ஸ்ரீனிவாசனிடம் கமல்ஹாசன் தோல்வியுற்றதை குறிப்பிட்டு தான் கமல் இப்படி எழுதியுள்ளார் என்று கஸ்தூரி தெரிவித்திருப்பதால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல்
வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல.
ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல.
கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு! @RedGiantMovies_ @ikamalhaasan https://t.co/6ifCVum4PH— Kasturi Shankar (@KasthuriShankar) May 11, 2022