harish kalyan [File Image]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக ஓடி வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக 7-வது சீசன் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற சீசன்களை போல இந்த சீசன் இல்லை என்றே கூறலாம்.
குறிப்பாக இந்த சீசனில் வீடு இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. எது என்னவென்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றிய சம்பவம் தான்.
இந்த 7-வது சீசனில் அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் நிலையில், அவர் வெளியேறியது தெரிந்தவுடன் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். பிரதீப் ஆண்டனி வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களை தர குறைவாக பேசிய காரணத்தால் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு அவர் வெளியேறினார்.
இருந்தாலும் உண்மையாக தன்னுடைய மனதிற்கு தோன்றுவதை வெளிப்படையாக பேசி மற்ற போட்டியாளர்களுக்கு சவாலான போட்டியாளராக வீட்டிற்குள் இருந்த அவர் வீட்டை விட்டு வெளியேறியது விமர்சனத்துக்குள்ளாகியள்ளது. இதற்கு இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ஹரிஷ் கல்யாண் ” நான் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருக்கிறேன். மற்ற சீசன்களை போல இந்த சீசனும் நன்றாக இருக்கிறது. இந்த சீசன் நிகழ்ச்சியில் இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு இருப்பது பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இந்த மாதிரி இரண்டு வீடுகளாக பிக் பாஸ் பிரிக்கப்பட்டால் கண்டிப்பாக சண்டை வரத்தான் செய்யும்.
அது மட்டுமில்லை பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைகள் வருவது தான் சுவாரசியம். சண்டைகள் வந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்” என ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் அடுத்ததாக டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறேன். விரைவில் என்னுடைய படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…