பீஸ்ட் முழு கதை இது தான்.! இணையத்தில் வெளியான அதிகாரபூர்வமாக தகவல்.!

தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் விஜய்,பூஜாஹேக்டே, செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் மேலும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
டார்க் காமெடி கலந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. பொதுவாக ஒரு படம் வெளிநாடுகளில் வெளியாக உள்ளது என்றால், அது அந்த நாட்டு மக்களுக்கு புரியும் வண்ணம் சிறு குறிப்பாக அந்த கதை சுருக்கத்தை படத்தின் இணைய விளம்பரத்தில் தெரியப்படுத்துவார்கள்.
அந்த வகையில், தற்போது பீஸ்ட் படத்தின் கதை சுருக்கம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் விஜய் முன்னாள் ராணுவ வீரராக நடித்துள்ளார். ஒரு ஷாப்பிங் மாலை தீவிரவாத கும்பல் கடத்திவிடுகிறது. அந்த மாலில் தான் விஜய் இருக்கிறார். அவர் அங்குள்ள சில நபர்களை கொண்டு எப்படி புத்திசாலித்தனமாக கையாண்டு, தீவிரவாத கும்பல் சதியை முறியடிக்கிறார்” இதுதான் படத்தின் கதை என குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025