இதுதான் விஜய்யின் எளிமை…பகவதி படத்தில் நடந்த சம்பவம்…நெகிழ்ந்து போன இயக்குனர்.!

Bagavathi - vijay

நடிகர் விஜய் பொதுவாகவே தன்னுடைய ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களுடன் கேஸூலாக நடந்து கொள்வார். அது எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை அதனை பெரிதாக நினைப்பவர் இல்லை.

இதனை, அவரிடம் பழகியவர்களும் அவர் தனது ரசிகர்கள் அவரிடம் நடந்து கொள்ளும் விதம் தொடர்பான வீடியோக்களில் பார்த்தால் கூட தெரியும். அதிலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சொல்லவே தேவையில்லை, அந்த அளவுக்கு கண்ணியமாக நடந்து கொள்வார்.

bhagavathi
bhagavathi [file image]
அதாவது, படப்பிடிப்பு தளத்திற்கு வருவதாக இருக்கட்டும், தனக்கு கொடுக்கப்ப டேக்கை ஒரு முறையில் முடித்து விடுவார். அந்த அளவுக்கு அவர் குறை சொல்ல முடியாத அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொள்வதை அவருடன் நடிக்கும் சக நடிகர்கள் பலநேர்காணலில் கூறியுள்ளார்கள்.

இவ்வாறு இருக்கையில் விஜய் நடித்த பகவதி படபிடிப்பு தளத்தில் விஜய் நடத்தை பார்த்து எ.இயக்குனர் வெங்கடேஷ் நெகிழ்ந்து போன சம்பவத்தை சினிமா விமர்சகரான செய்யாறு பாலு கூறியுள்ளார்.

bhagavathi vijay
bhagavathi vijay [file image]
கடந்த 2002ம் ஆண்டு இயக்குனர் எ.வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பகவதி.  இந்த படத்தின் முக்கிய காட்சிகள் வைசாக்கில் நடைபெற்று வருகையில், மதியத்திற்கு மேல் விஜய் தொடர்பான காட்சிகள் எடுக்க திட்டமிடப்பட்டிருந்ததாம்.

அந்த படத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று இருக்கும், அந்த பைக்கை எடுத்துக்கொண்டு இயக்குனர் எ.வெங்கடேஷ் வைசாக் மெயின் ரோட்டில் ட்ரைவ் செய்து இருக்கிறார். அப்போது, தூரத்தில் விஜய்யின் காரை கவனித்த எ.வெங்கடேஷ் காரின் அருகே சென்று மெதுவாக பார்த்து இருக்கிறார்.

bhagavathi director and vijay
bhagavathi director and vijay [file image]
அப்பொழுது, விஜய்யின் கார் நிழலில் பாய் ஒன்றை விரித்து தனது கையை தலைகாணியாக வைத்து உறங்கி கொண்டு இருந்தாராம். அந்த எளிமையை பார்த்த இயக்குனர் எ.வெங்கடேஷ் நெகிழ்ந்து போனதாக சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Indonesia Landslide
bcci
mysskin - Aruldoss
seeman ponmudi
RN Ravi - Congress
ADMK - EPS