இவரா பிளாஸ்டிக் ஒழிப்பின் விளம்பர தூதர் !!!!பரப்பரப்பு பேட்டி !!!
பிரபல நடிகர் விவேக் அவர்கள் தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார் .அவர் பேசுகையில், நாம் பிளாஸ்டிக்கை சுமாராக 1970 ஆம் ஆண்டில் இருந்தே பயன் படுத்துகிறோம் .ஒரு முறை பயன்படுத்தி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு சுமாராக 400 வருடங்கள் ஆகிறது .மேலும் பிளாஸ்டிக் நிலத்தடி நீர் வளத்தை கெடுக்கிறது என்று கூறினார் .பல்லுயிரின பெருக்கத்தை தடை செய்கிறது .
மண்ணின் வளத்தையும் கெடுக்கிறது. இதனால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப் படுகிறது .மேலும் பிளாஸ்டிக் உற்பத்தி கம்பெனிகளில் வேலை செய்யும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் அவர்களுக்கு மாற்றுவேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் .
தாத்தா பாட்டி பயன்படுத்திய மஞ்சப்பை ,சுருக்குப்பைகளை பயன்படுத்த வேண்டும்.அதுவே நமக்கு நன்மை தரும்.மேலும் சிப்ஸ் ,பிஸ்கட் ,பால் பாக்கெட்களில் பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பைகள் மிகவும் ஆபத்தானது .மேலும் நாம் அதை பயன்படுத்த கூடாது . அதற்கு மாற்றாக நாம் வாழை மட்டைகைளை பயன்படுத்தி பிளேட்,கப் முதலிவற்றை செய்யலாம் என்று கூறினார் .
மேலும் நாம் வருங்கால சந்ததியினருக்கு நன்மை செய்ய விரும்பினால் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று விறு விறுப்பாக கூறினார் .மேலும் இவரை பிளாஸ்டிக் ஒழிப்பு விளம்பர தூதராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது .