போட்ட பணம் திரும்ப வருமா.? ஏக்கத்தில் ஜப்பான் தயாரிப்பாளர்.! 4 நாள் வசூல் இவ்வளவு தான்…

Japan movie -sr prabhu

எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 10ஆம் திரைக்கு வந்தது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிகர் கார்த்திக்கு இது அவருக்கு 25 படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

இவ்வாறு, பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எவ்வாறு வெற்றி பெற்றது என்பது பற்றி பார்த்தால், தொடக்க நாளிலியே நெகடிவ் விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றே சொல்லலாம்.

ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஜப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளதால், முதலீடு செய்த பணத்தை எடுத்திவிடலாமா என்ற எதிர்பார்ப்பில் தயாரிப்பாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், இந்த திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் வேட்டையில் களமிறங்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்…4 நாளில் எத்தனை கோடி தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸ்

படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் ரூ. 4.15 கோடியும், இரண்டாம் நாளில் சற்று குறைந்து ரூ.2.85 வசூலித்தது. இதனையடுத்து, மூன்றாம் நாளான தீபாவளி அன்று ரூ.4.9 கோடி வசூலித்த நிலையில், 4வது நாளான நேற்று ரூ.7.9 கோடி வசூலித்திருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த தகவலின்படி, படத்தின் ஒட்டுமொத்த வசூல் உலகம் முழுவதும் ரூ.20 கோடியைத் தாண்டியுள்ளது. இருந்தாலும், இனி வரும் நாட்கள் வேலை நாட்கள் என்பதால் எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜப்பான்

எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack