இது விஜய்யா இல்லை பார்த்திபனா? நெட்டிசன் செய்த செய்கையால் பிரபல நடிகர் ஷாக்கிங்

parthiban - leo

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான “லியோ” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்துக்கு முதல் மூன்று நாட்கள் பாசிடிவ் விமர்சனங்கள் வந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தது. அதாவது, மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்திய இந்த படம் அந்த அளவுக்கு பூர்த்தி செய்யவில்லை என்று தெரிகிறது.  அதுபோல் தான் இப்படத்தில் இருந்து நெகடிவ் பற்றி சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

லியோ படத்தில் பார்த்திபன் என்ற கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். லியோ திரைப்படம் வெளியான போது, நடிகர் பார்த்திபன் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என கிசுகிசுக்க தொடங்கியது. இதற்கு பெயரளவிலாவது இப்படத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி என நடிகர் பார்த்திபன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

LeoBoxOffice: 500 கோடியை தாண்டிய ‘லியோ’! ஒரே வாரத்தில் மிரட்டல் சாதனை!

இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யின் படத்தில் பார்த்திபன் முகத்தை பொருத்தி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு என கூறியுள்ளார்.

 

லியோ திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக விஜயின் சினிமா வாழ்க்கையில் 500 கோடி வசூல் கொடுத்த திரைப்படம் மற்றும் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. வெளியான ஒரு வாரத்தில் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்வது என்பது தமிழ் சினிமாவில் சாதாரண விஷயம் இல்லை, அதனை லியோ படம் செய்துள்ளது தமிழ் சினிமாவையே பெருமை படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்