இது அன்னபூரணி ஸ்பெஷல்…ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறும் நயன்தாரா.!

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது, தனது ரசிகர்களுக்கு பிரியாணி உணவை பரிமாறி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான “அன்னபூரணி” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளள்ளார். படத்தை எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளளார்கள்.
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் பிரமாண பெண்ணாக வரும் நடிகை நயன்தாரா அசைவ சமையல் செய்யும் ஃசெப் ஆக நடித்திருக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் ப்ரோமஷன் விழா கல்லூரி ஒன்றில் நடைபெற்றுள்ளது. இதுவரை தனது படத்துக்கென எந்தவித ப்ரமோஷன் விழாவிலும் பங்கேற்காத நயன்தாரா இவ்விழாவில் பங்கேற்ற லெஸி சூப்பர் ஸ்டார் தனது ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறியுள்ளார்.
#Annapoorani – #Nayanthara serves Briyani to her fans..????pic.twitter.com/q8ocKeMMSc
— Laxmi Kanth (@iammoviebuff007) December 3, 2023
மேலும் இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ஜெய்யும் ரசிகர்களுக்குப் பிரியாணி பரிமாறி அன்பை பகிர்ந்து கொண்டனர். தற்போது நயன்தாரா பிரியாணி பரிமாறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அசைவம் செய்து அசத்தினாரா நயன்தாரா? அன்னபூரணி விமர்சனம்…
இறைச்சி சாப்பிடுவது குற்றமாகக் கருதப்படும் பழமைவாத பிராமண குடும்பத்தில் வளர்க்கப்படும் அன்னபூரணி (நயன்தாரா) இந்தியாவிலேயே ஒரு சிறந்த சமையல் கலைஞராக உருவாக வேண்டும் என்ற தனது கனவை வளர்த்து வருகிறார். பின்னர், அந்த கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே அன்னபூரணி படத்தின் கதை. இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025