விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் ” நான் சினிமாவிற்குள் வந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாம் இதுவரை என்ன சாதனை எல்லாம் பண்ணினோமோ அது எல்லாம் பெரிய சாதனை இல்லை. அடுத்ததாக சாதனை செய்ய வேண்டும் என்று யோசித்தால் மட்டுமே ஆர்வமாக இருக்கும். இந்த பள்ளியில் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்து ரொம்பவே சந்தோசம்.
நான் ஒரு படத்திற்காக 120 சர்வதேச விருதுகள் வாங்கி இருக்கிறேன். எனக்கு பெரிய ஆசை எல்லாம் இல்லை ஒரு ஆஸ்கர் விருது மட்டும் வாங்கவேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியது போல நானும் ஒரு ஆஸ்கர் விருது வாங்கவேண்டும். இது தான் என்னுடைய மிகப்பெரிய கனவு என்று கூட சொல்லலாம். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையில் தான் வந்தேன்.ஆனால் இயக்குனராக வெற்றி பெற்ற பிறகு எனது ஆசையை நிறைவேற்றி கொண்டேன்” என கூறியுள்ளார்.
மேலும், பார்த்திபன் தற்போது ‘இரவின் நிழல்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “52-ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…