சமந்தாவை விட இவங்க நடிச்சா என் வாழ்க்கை படத்திற்கு பொருத்தமாக இருக்கும் : பி.வி.சிந்து
சமீப காலமாக சினிமா துறையில், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களின் வாழ்க்கையை படமாக்கி வருகின்றனர். இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார்.
இந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாறு படமாக உள்ள நிலையில், இப்படத்தில், பி.வி.சிந்து கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பி.வி.சிந்து சமந்தாவுக்கு நெறியையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறுபட்ட சூழ்நிலை நிலவியுள்ளது.
வீராங்கனை பி.வி.சிந்துவிடம், உங்கள் வாழ்க்கை கதையில் யார் நடித்ததால் பொருத்தமாக இருக்கும் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த பி.வி.சிந்து, எனது வாழ்க்கை கதையில் சமந்தாவை விட, தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருப்பார்.
ஏனென்றால், அவரும் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை. ஆனாலும், என் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை இப்படத்தின் தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.