பிரதர்: நடிகர் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடித்து வெளிவரவிருக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார்.
ஒரு பொழுதுபோக்கு குடும்ப படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன், ஜெயம் ரவிக்கு மனைவியாக நடித்துள்ளார் போல் தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
அந்த போஸ்டரில் பிரியங்கா அருள் மோகன் மற்றும் ஜெயம் ரவி கழுத்தில் மாலையுடன் இருக்கின்றனர். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
படத்தில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா அருள் மோகன் தவிர, இப்படத்தில் பூமிகா சாவ்லா, வி.டி.வி கணேஷ், நட்ராஜ் சுப்ரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சுரேஷ் சக்ரவர்த்தி, விருத்தி விஷா, மாஸ்டர் அஷ்வின் ஆகியோர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் vs ஜெயம் ரவி :
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘பிரதர்’ திரைப்படமும் அன்றைய தினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் போட்டி நிலவும் என தெரிகிறது.
இவர்கள் இருவரின் திரைப்படம் திரையரங்குளில் ஒன்றாக மோதுவது இதுவே முதல் முறை. பிரதர் ஒரு குடும்ப படம் என்பதால், குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும், அதே வேலையில் அமரன் கதை களம், காஷ்மீர் தீவிர வாதத்தால் பலியான தமிழக ராணுவ வீரனை பற்றியது. என்ன நடக்க போகிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…